விக்னேசுவரனின் வலைப்பதிவு

Vigneswaran's Blog

என் விருப்பங்கள் My Interests

ஒளியை பின்தொடரும் இரட்டை உருளைப் பொறியன்.

Two Wheeled Differential Drive Light Follower Robot.

இந்த பொறியன், முன்புறம் எதிரெதிர் மூலைகளிலும் வைக்கப்பட்டுள்ள இரு ஒளி உணர்கருவிகள் மேல் படும் ஒளிச்செறிவின் மூலம் இயக்கப்படுகிறது.

This robot's movement is controlled by the light intensity it receives using two photo sensors placed at front opposite corners of the robot.

தேவையான பாகங்கள்:

Required Parts:

1. நுண்கட்டுப்படுத்தி : நிரவுகோண் 8 துணுக்கு நுண்கட்டுப்படுத்தி (பிஐசி18ஃ452).

1. Microcontroller : Augumented advanced 8 bit microcontroller (Pic18f452).

• உள்ளமை மின்ஓடியக்கி,படிநிலை மின்ஓடியக்கி,எல்இடிக்கள் மற்றும்பல ஒப்புமை உள்ளிடு/வெளியிடு முகப்புகளை சரிபார்க்கவும்.

• check for built in motor driver,stepper motor driver,Leds and many analog input/output ports.

• திறன் சீராக்கம் மின்சுற்றை சரிபார்க்கவும்(0-5வி).

• check for power regulation circuit(0-5v).

2. பிஐசி நிரலர்.

2. Pic Programmer

• இந்த பொறியனை நிரலாக்க ஒரு தொடர்நிலைத் துறைசார் ஐசிஎச்பி நிரலர் வேண்டும்.

• a serial port based ICSP Programmer for PIC microcontroller is must for programming this robot.

• ஐசிஎச்பி நிரலர் ஐசி-ப்ரோக் மென்பொருளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

• programmer should be compatible with IC-Prog software.

3. ஒளி உணரி.

3. Light Sensor

• ஒளிசார் மின்தடை 7எம்எம் (இரண்டு).

• Light Dependent Resistor 7mm (2 nos).

4. மறுமின்னூட்டும் மின்கலத்தின் குணங்கள்.

4. Rechargeable Battery Characteristics:

• அதிக எம்ஏஅச் (ஆற்றல் கொள்திறன்).

• high mAh(energy capacity).

• எப்பொழுதும் 1ஆம்ப் ஆவது வெளியீடு வேண்டும்.

• can output atleast 1amp at any time.

• அதிகமாக மறுமின்னூட்ட இயல வேண்டும்.

• can recharge as much as we want.

• மறுமின்னூட்ட 10 மணி நேரம் பிடிக்கும்.

• 10 hours to recharge.

• உயர் தன்வய மின்னிறக்கம்.

• self discharge rate is high.

• நிகாடு மின்கலத்தைவிட அதிக மறுமின்னூட்ட சுழற்ச்சி.

• more number of recharge cycles than Nicad battery.

• பரிந்துரைக்கப்படடும் மறுமின்னூட்டும் மின்கலம்.

Recommended Rechargeable Battery:

• இரு என்ஐஎம்அச் மின்கலக்கட்டு.

• two Nimh 6v battery packs.

• விசைப்பொறித்திறனை சுற்றுத் திறனிலிருந்து தனிமைப்படுத்த இரு மின்கலகங்களை பயன்படுத்தவும் (ஒரே மின்கலத்தை பயன்படுத்தினால் சுற்றமைப்பை உருக்க நேரும்).

• two batteries to isolate motor power from circuitory power(single battery for both motor and circuit may melt sensitive circuitory).

5. விசைப்பொறி.

5. Motor

• இரு 5-8வி டிசி விசைப்பொறி.

• two 5-8v DC motor.

• முறுக்கு விசை தேவையைவிட இருமடங்கு இருக்க வேண்டும்.

• torque should be double the requirement.

6. உருளை.

6. Wheel

• 2-3 இன்ச் குறுக்களவு உருளை.

• 2-3 inch diameter wheel.

பிஐசி தொகுப்பி:

Pic Compiler:

பிஐசி-18 நுண்கட்டுப்படுத்தியை நிரலாக்க, ஐ-டெக் சி தொகுப்பி வேண்டும்.

• Hi-Tech C compiler for Pic 18 microcontrollers.

• இந்த லைட் பதிப்பில்(இலவசப்பதிப்பு), உகப்பாக்கம் தளர்வுறச்செய்யப்பட்டுருக்கிறது (அதாவது தொகுத்த கோப்பின் அளவு பெரியதாக இருக்கும்).

• In this lite version(free version), optimization is disabled(i.e size of the compiled file is big).

Download C Code

Note: PhotovoreRobot_code\dist\default\production\Photovore.X.production.hex (HEX file to be loaded in PIC MCU)

என் வலைப்பதிவைப் பார்த்தமைக்கு நன்றி.

Thanks for visiting my blog.